Friday, April 27, 2007

 

நகைச்சூ வை கவ்வித்தை

ஆற்றிலே போட்டது குளத்திலேயும் அள்ளிப்போட ஆளிருந்தால், வந்து மிதக்கும் என்பதற்கு உதாரணம் இது.

தமிழ்நெற்றோ, உலகத்தமிழ்க்குழுமத்திலேயோ கொஞ்சக்காலம் உள்ளிவாயன் பெருங்காயடப்பா என்று 2002 இலே போட்டதிலே சிலவற்றைக் கிளப்பி ராயர்காபிகிளப்பிலே ரங்கபாஷ்யம்/சாந்தசொரூபன் தகரடப்பா/அண்ணாமலை இன்னோரன்ன பெயர்களிலே எழுதியவர் பற்ற வைக்கப் போட்டிருந்தார். அண்மையிலே இகாரஸ் பிரகாஷ் பதிவிலே எதேச்சையாக மாட்டின. பெருங்காயடப்பாவுக்கும் தகரடப்பாவுக்கும் சம்பந்தமேயில்லை என்று சொன்னதை அன்றும் இன்றும் நம்பாத ஒருவர் பதிவுலகிலும் இருக்கின்றார். வலைப்பதிவுக்கு முக்கியமானது "பதிவா? பின்னூட்டமா?", "பதிவு எண்ணிக்கையா? பதிவிற்கான காரணமா?" என்று பட்டி(தமிழ்ப்பட்டிதான்)மன்றங்களே வைக்கலாமா என்ற நிலையிலே எண்ணிக்கையின் சார்பிலே இந்த இடுகை.

ரங்கபாஷ்யம் ராயர்காபிகிளப்பிலே எடுத்துப்போட்ட அஞ்சற்சுட்டிகளும் "இந்த டப்பா அந்த டப்பா இல்லை" என்று எழுதின கூற்றுச்சுட்டியும் இவை
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2839

http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2840
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2842
http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/2843

இதையெல்லாம் நகைச்சுவை வகைக்குள்ளே எடுத்துப்போட நம்பிக்கை தந்த நகைச்சு வை வலைப்பதிவர் சிலருக்கு உளம் நிறைந்த நன்றி.
======================================================================================

உலகமாதா வாத்து (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)

யுகம் புரண்ட புருஷன் அவம் திரண்ட கருடன்
சூக்மதாரி அடங்காப்பிடாரி இயமம் நியமம்
சோதிடம் சொல்லா நித்ய ஞான கோவணதாரி
காட்டாரி மலையாளபகவதி வேதசகாயி
சின்னக்கருப்பி மஞ்சுள நாட்சி
சரணவ மால ராஜநாயகி அம்மா நரநர
பாவி கந்த சிவம் இடப்பாகி ஜிலேபி
குலேபகாவலி ஆதரி நீயெனை
அம்மா படிந்தேன் சரணம்
ஹரி போல் ராம் ராம்
கோவண்ணப்பால் ராம நமோ நமோ
மலமறு ராட்ஸசி சூத்திரதாரிதன்
சூல்தரு மோகி சரவணத்தாயே
ஜெய ஜெய ஜெய ஜெய
உலகம் வாழ அருள்பொழி மாதா!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இலேசான ரிப்போட்டர்

லாசரா நம்மாளு
ஆசாரமானவரு
கீசடா மீதியெல்லாம்
கீசக அவதாரம் பாரு.
சொல்லுடா கிஷ்டா,
வாங்கித்தாரேன் நாஷ்டா
பாரா யாருடா?
பொட்னு பூட்டாரே - அந்த
கேரளா கவுனரா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மறக்கமுடியுமா?*

மூணாம்வகுப்பிலே
மூக்குத்தோண்டியதை
மறக்கமுடியுமா?

வீடுபெருக்கும்
முனியம்மாவைப் பார்த்து
விஸில் அடித்ததை
மறக்கமுடியுமா?

ஆத்தங்கரையிலே
அல்வா அவுக் அவுக்கின்னு தின்னு
பேதியாகி கோரைப்புல்லு பின்னாடி
குந்தினதை மறக்கமுடியுமா?

ஏழாம் கிளாசு வாத்தி
இங்கிபிலீஸ¤ கத்துத்தந்தப்போ,
எலந்தைப்பழம் தின்னதை
மறக்கமுடியுமா?

சினிமா போய்
இரவிலே சைக்கிளிலே
நிலவிலே திரும்பி வந்ததை
மறக்கமுடியுமா?

இப்போது,
எட்டாத தொலைவிலே
ரிச்மண்டிலே
மண்டிபோட்டு
கம்பியூட்டரிலே
மாங்குமாங்கு
தேங்கா ஸைஸிலே
ஜாவா எழுதினாலும்
இஸ்மயில் பாவா
மூணாம் வகுப்பிலே
மூக்கணாம்ப்பட்டி முனிசிபல் ஸ்கோலிலே
மூக்குத் தோண்டியதையும்
முனியம்மாவையும்
மறக்கமுடியுமா?

அதனால், தீர்மானத்துக்கு வந்தாச்சு.
லே ஆப்போ லேத் வர்க்கோ
ரிச் மண்டு ஜாப்பை விட்டுவிட்டு
மூன்றாம் வகுப்பிலே எலந்தைப்பழம் தின்னு
திரும்ப இங்கிபிலீசு படிக்க
பாபாக்கு ஹாயா விஸில் அடிக்க
கோரைப்புல் கிராமத்துக்குக்
கோவணம் கட்டப் போகிறேன்.

முனுசாமி! முனியம்மா!!
வட் எவர் யு டூ, கிவ் இட் அப்.
பிளீஸ் ரிட்டர்ன் பக் டு
யுவோர் பழைய பாத்திரம்.

ஜாவாவே உன் உப்பு வாய்க்கு
ஒரு மூட்டை அல்வா.

கண்டினியூட்டி ஸாட்!
டேக் டென் டு த பவர் இன்பினிட்டி!
ஆக்ஸன் பிளீஸ்!!

------------------------
* இதற்கும் இப்பதிவுக்கும் சம்பந்தமில்லை; இந்தக் கடிவதைக்குக் காரணமான அடிப்படைகவிதை இது, ரங்கபாஷ்யம் சொல்லிய இதுவல்ல.
Comments:
ஆகா.. பெயரிலி அண்ணா... காபி கிளப், நம்மாளு, ஆசாரமானவரு, நாஷ்டா, மூணாம் வகுப்பு, முனியம்மா, ஆத்தங்கரை, ஆகா ஆகா.. எப்படி இலங்கைத் தமிழில் இப்படி விளையாடுகிறீர்கள் நண்பரே? எனக்கும் சொல்லித் தரலாமே
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?